புதினங்களின் சங்கமம்

மகனின் தாக்குதலில் தாய் பலி!! புகைப்படங்கள்

பெண்ணொருவர் தனது வீட்டு வளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று (6) ஞாயிற்றுக்கிழமை வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவலடி – கேணிநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

யாசகம் பெற்று வாழ்ந்து வரும் 65 வயது மதிக்கத்தக்க தாய் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தனது தாயுடன் வாழ்ந்து வந்த 46 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட மகன் தாக்கி குறித்த தாய் மரணமடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இச்சம்பவத்தில் சந்தேகத்தில் மகனை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

May be an image of 4 peopleMay be an image of 5 peopleMay be an image of 6 people