புதினங்களின் சங்கமம்

வெளிநாட்டுக்கு தப்பி ஓட முற்பட்ட ராஜபக்ச அரசின் செல்லப்பிள்ளை கட்டுநாயக்காவில் திருப்பி அனுப்பபட்டான்!!

ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், கடந்த ஆட்சியுடன் தொடர்புடைய பலர் நாட்டை விட்டுச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுக்கள், மோசடிகளுடன் ஈடுபட்ட பலர் பல நாடுகளுக்கு சென்றுள்ளனர்.இந்நிலையில் கடந்த மகிந்த ஆட்சியின் போது சர்ச்சைக்குரிய நபராக டான் பிரியசாத் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் தடுக்கப்பட்டுள்ளார்.டுபாய் செல்வதற்காக நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற டான் பிரியசாத் விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

இவர் நேற்று இரவு 08.35 மணியளவில் Emirates Airlines விமானமான EK-653 இல் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.அவருக்கு எதிராக நீதிமன்றம் விமான பயண தடை விதித்துள்ளது. இதன் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் அவர் திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.2022ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதியன்று கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்திய வழக்கின் 6ஆவது பிரதிவாதியாக டான் பிரியசாத் பெயரிடப்பட்டுள்ளார்.முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் போது பல்வேறு குற்றச்செயல்களில் டான் பிரசாத் ஈடுபட்டுள்ளதாக பல குற்றச்சாட்டுக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x