புதினங்களின் சங்கமம்

சுமந்திரன் வெற்றி!! யாழ் மத்தியகல்லுாரியில் கடும் மோதல்!! அதிரடிப்படையினர் தாக்குதல்!! (Video)

இதேவேளை யாழ்ப்பாணம் மத்தியகல்லூரியின் வாக்கெண்ணும் நிலையத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் ஒன்றாகிய புளொட் கட்சியின் ஆதவாளர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளமையால் பதற்ற நிலை ஏற்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக வெளியாகியிருந்த தகவல்கள் அடிப்படையில் சிவஞானம் சிறீதரன், சசிகலா ரவிராஜ் ஆகியோருடன் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவு செய்யப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் சசிகலா ரவிராஜை தன்னுடைய உறுப்புரிமையை சுமந்திரனுக்கு விட்டுத்தருமாறு பல சுற்றுப் பேச்சுக்கள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இருந்தபோதிலும் சசிகலா அதற்கு உடன்பட மறுத்தாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் திடீரென சித்தார்த்தன் தெரிவில் இடம்பெற்றிருக்கவில்லை என்றும் அவருக்கு பதிலாக சுமந்திரனின் பெயரே இடம்பெற்றதாகவும் அங்கிருந்தவர்களுக்கு தகவல் வழங்கப்பட்டிருந்ததாகவும் இதனை அடுத்து மீள வாக்கினை எண்ணுமாறு புளொட் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியிருப்பதாகவும் அதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுவதாகவும் தெரியவருகிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.ஏ.சுமந்திரன், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வாக்குகள் எண்ணும் மத்திய நிலையத்துக்கு வருகை தந்த நிலையில் அங்கு கூடியி்ருந்தவர்களும் தமது எதிர்ப்பை வெளியிட்ட நிலையில் சிறப்பு அதிரப்படையினர் தடிஅடி நடத்தினர்.

அதனால் அங்கு குழப்பநிலை ஏற்பட்டது. எனினும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்களின் கடும் எதிர்ப்புக்கும் மத்தியிலும் சுமந்திரன் சுமார் 15 நிமிடங்களில் கடும் பாதுகாப்புடன் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.ஏ.சுமந்திரன், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வாக்குகள் எண்ணும் மத்திய நிலையத்துக்கு அதிகாலை 1.40 மணியளவில் கடும் பாதுகாப்புடன் வருகை தந்தார்.

இந்தச் சம்பவங்களின் போது சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வலி. தெற்கு பிரதேச சபை உறுப்பினர் தவராசா துவாரகன் மீது பொலிஸாரும் சிறப்பு அதிரடிப்படையினரும் தாக்குதலை மேற்கொண்டனர். அதனால் அவர் படுகாயமடைந்தார்.

இதே வேளை தற்போது சசிகலா தோல்வி அடைந்ததாகவும் சுமந்திரன் வெற்றி பெற்றதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Image may contain: 3 people, close-up

<