Home புதினங்களின் சங்கமம் மாணவிக்கு அந்தரங்க வீடியோக்கள் காட்டிய ஆசிரியர் கைது! தமிழர் பகுதியில் சம்பவம்!

மாணவிக்கு அந்தரங்க வீடியோக்கள் காட்டிய ஆசிரியர் கைது! தமிழர் பகுதியில் சம்பவம்!

தலவாக்கலை பகுதியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் ஆசிரியராகப் பணியாற்றிவரும் ஒருவர், வகுப்பறைக்குள் மாணவியொருவருக்குத் தகாத காணொளிகளைக் காட்டியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து அம்மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, கடந்த 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அம்முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட தலவாக்கலை பொலிஸார், சந்தேகநபரான ஆசிரியரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஆசிரியர் திங்கட்கிழமை நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை எதிர்வரும் அக்டோபர் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments