அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணபதிபுரம் – மல்வத்தை 04 பகுதியில், 54 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயான வேலுப்பிள்ளை பிரவாவதி உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நீதிமன்ற உத்தரவுக்கமைய, திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீத் அல் ஜவாஹிர் சம்பவ இடத்திற்குச் சென்று மரண விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.
இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம் மேலதிக நடவடிக்கைகளுக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
உயிரிழப்புக்கான சூழ்நிலைகள் தொடர்பில் பொலிஸாரின் மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.





