யாழ்ப்பாணம் தனங்கிளப்பு பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பூநகரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மன்னாரைச்சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. இருப்பினும் அப் பகுதி மணல் கொள்ளையர்களின் ஆக்கிரமிப்பு பகுதி எனவும் குறித்த பொலிஸ்காரர் திட்டமிட்டு வேறு வாகனத்தால் இடித்து தள்ளப்பட்டிருக்கலாம் எனவும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றார்கள்.






