புதினங்களின் சங்கமம்

மாத்தளையில் அதிகவலுவுடைய மின்கம்பி அறுந்து விழுந்ததில் 2பேர் பலி! (Photos)

மாத்தளையில் சம்பவம்; அதிகவலுவுடைய மின்கம்பி அறுந்து விழுந்ததில் இருவர் பலி!

மாத்தளை, மஹஉல்பத்த பகுதியில் அதிவலுவுடைய மின்கம்பிகள் அறுந்து வீழ்ந்ததில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விற்பனைக்காக உணவுப்பொருட்களை சேகரித்துக் கொண்டுசென்ற வேளையில் லொறியொன்றின் மீது பலா மரத்தின் கிளையொன்று உடைந்தை அடுத்து அதிவலுவுடைய மின்கம்பி அறுந்து வீழந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது லொறியில் மூவர் இருந்துள்ளதுடன், இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். மற்றையவர் லொறியில் இருந்து குதித்து உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். செலகம மற்றும் மஹவெல பகுதிகளைச் சேர்ந்த 23 மற்றும் 27 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Image may contain: one or more people and outdoorImage may contain: tree, outdoor and foodImage may contain: outdoor and text