புதினங்களின் சங்கமம்

திறப்புடன் நிறுத்திவிட்டுச் சென்ற பொலிசாரின் ஜீப்பைக் கடத்திச் சென்ற கில்லாடி யார்?

சாவியை உள்ளே வைத்து பொலிஸ் வாகனத்தை நிறுத்திவிட்டு சோதனை நடவடிக்கைக்கு சென்ற பொலிஸார் – வந்து பார்த்தால் வாகனம் மாயம் – திருடிய நபருக்கு வலைவீச்சு திஸ்ஸமஹாராமவில் விசித்திர சம்பவம்
திஸ்ஸமஹாராம பொலிஸார், நேற்றிரவு நடைபெற்ற சோதனையின் போது திருடி செல்லப்பட்ட பொலிஸ் வாகனத்தைத் திருடிய தேடி வருகின்றனர்.
பொலிஸாரின் தகவலின்படி, நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, வாகனத்தின் சாவியை உள்ளே வைத்து பூட்டப்படாத நிலையில் வாகனத்தை விட்டு சென்று இருந்தனர். இந்த வேளையில் இதனைப் பயன்படுத்தி, சந்தேக நபர் ஒருவர் அந்த வாகனத்தை திருடி சென்றுள்ளார்.
பின்னர், குறித்த வாகனம் கைவிடப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டது.
சந்தேக நபரை அடையாளம் காணவும், கைது செய்யவும் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.