மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மீண்டுமொரு அலட்சிய கொலை …
எங்கள் பிஞ்சு உயிர்,
விபத்து நடந்து பிள்ளையை கொண்டு சேர்த்தோம். பிள்ளைக்கு ஒன்றுமில்லை ஒன்றுமில்லை கூட்டிச்செல்லுங்கள் என்றீர்கள். ஐயா குழந்தை வாந்தி எடுக்கிறது வீட்டுக்கு கொண்டு செல்லலாமா என்று கேட்டோம். சாதாரண வாந்தி அழைத்து செல்லுங்கள் என்றீர்கள். இரத்தமும் சேர்ந்து வருகிறது என்றோம் இல்லை அது மூக்கில் கசிந்த இரத்தம்தான் எங்களுக்கு வாந்தியில் வித்தியாசம் தெரியும். வீட்டுக்கு கொண்டு செல்லுங்கள் என்று சொல்லி சொல்லி கடைசியில் எங்கள் குழந்தையை வீட்டைவிட்டே போகவைத்துவிட்டீர்களே…
JMO REPORT: தலையில் இரத்தக்கசிவு
வைத்தியசாலையில் இருந்து வந்த 3 நாட்களும் அவனுடன் பயணித்த உறவுகளின் மனநிலையை சிறிது சிந்தித்து பாருங்கள். உங்கள் வீட்டிலும் குழந்தைகள் உள்ளனர்.
தப்பைக் கேட்டால் நாங்கள் வைத்தியசாலைக்கு எதிரானவர்கள்.. நீங்கள் சரியாக நடந்தா நாங்க ஏன் ஐயா நாங்க கேட்க.
5 வயது பாலகனின் உறவினரின் குமுறல்
#Copied.
இப்படியும் #சில மருத்துவத்துறையினர், இதற்கான நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்பட வேண்டும். உங்களை கடவுளாக நம்பியே உங்களிடம் வருகின்றோம். பல வைத்தியத்துறையினர் தற்காலத்திலும் குடும்பத்தை பிரிந்து காலம் நேரம் பார்க்காமல் மக்களுக்காக உழைத்துக்கொண்டு தான் இருக்கின்றார்கள்.
ஆனாலும் இப்படியான #சிலரின் அசமந்த போக்கினால் #கொலைகளும் இடம்பெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன. இதை நாமும் சில நாட்கள் பேசிவிட்டு கடந்து விடுகின்றோம். ஆனால் அந்த உயிரை இழந்த குடும்பத்திற்கு வாழ்நாள் பூராகவும் அந்த வலி தொடரும்.
நாளை இப்படி ஒரு #கொலை அலட்சியத்தினாலோ அசமந்த போக்கினாலோ நமக்கோ நமது குடும்பத்திற்கோ இடம் பெறலாம் என நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.
வைத்தியத்துறையில் பல மரணங்கள் முழுமூச்சாக போராடி கடைசியில் நிகழ்கின்றன. அதனை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் இப்படியான அலட்சிய மரணங்களை/ கொலைகளை எந்தவொரு காரணத்திற்காகவும் ஏற்றுக்கொள்ளவும் முடியாது.
இதுவே இறுதி அலட்சிய கொலையாக இருக்கட்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்து இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை வழங்க ஆவண செய்ய வேண்டும்.


