புதினங்களின் சங்கமம்

யாழில் இன்றும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி!!!

யாழ்ப்பாணம் – பலாலிப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் இருவருக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இன்று (15) 23 பேருக்கு கோரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சந்தேகத்தின் அடிப்படையில் சேர்க்கப்பட்ட 4 பேர், பலாலி தனிமைப்படுத்தப்பட்ட நிலையத்தில் உள்ள 3 பேர், யாழ்ப்பாணம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 7 பேர், நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த 2 பேர் மற்றும் முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள 7 பேருக்கு பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

இவர்களில் பலாலிப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.

நேற்று பலாலியில் தங்கவைக்கப்பட்டிருந்த எட்டுப் பேருக்கு தொற்றியிருந்தமை கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.