புதினங்களின் சங்கமம்

மனைவி நிஷாந்தினி நடந்தது என்ன? யாழ்.பல்கலை சிரேஷ்ட விரிவுரையாளர் நித்திலவர்ணன் சற்றுமுன் வெளியிட்ட பதிவு!

19.12.2025

யாழ்.பல்கலைக்கழக கல்வியியல்துறைத் சிரேஷ்ட விரிவுரையாளர்  நித்திலவர்ணன சமூகவலைத்தளத்தில் விடுத்துள்ள பதிவினை அப்படியே தந்துள்ளோம்..

எமது குடும்பத் தலைவி திருமதி.நிஷாந்தினி நித்திலவர்ணன் அவர்களின் திடீர் மறைவினால் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்ந்துள்ள எமது குடும்பத்தினருக்குப் பல்வேறு வழிகளில் ஆதரவும், ஒத்துழைப்பும் வழங்கி ஆறுதல் கூறிய அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், இத் துயரகரமான சூழ்நிலையில் எமது குடும்பத் தலைவியின் மறைவு தொடர்பாக சமூக ஊடகங்களில் சில அவதூறான மற்றும் தவறான தகவல்கள் பரப்பப்படுவதை அறிந்து மிகுந்த வேதனை அடைந்துள்ளோம்.

இந் நிலையில் எமது குடும்பத் தலைவியின் மறைவு தொடர்பாக உரிய சட்ட நடைமுறைகளின் கீழ் பூரண மரண விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

பருத்தித்துறையில் அமைந்துள்ள எமது இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்ட வேளையில் வீட்டில் எமது இரண்டு பிள்ளைகளும், என் மனைவியும் மட்டுமே இருந்தனர். துரதிஷ்டவசமாக, எனது அலுவலகக் கடமை காரணமாக அச் சமயம் நான் கொழும்பிலிருந்தேன். தகவல் கிடைத்த உடன் மறுநாள் காலையிலேயே நேரடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வரக் கூடியதாகவிருந்தது.
எனக்கும், என் மனைவிக்குமிடையில் எப்போதும் பரஸ்பர புரிதலும், நல்லுறவும் நிலவி வந்தது என்பதை அனைவரும் அறிவர். மேலும், தவறான அல்லது அவசரமான முடிவுகளை எடுக்கக் கூடிய தன்மையுடையவர் அவர் அல்ல. அவரது தனித்துவமான ஆளுமைக்கும், நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையிலான கருத்துகளைத் தவிர்க்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். எமது குடும்பத் தலைவியின் மறைவு தொடர்பாகத் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாமென அனைவரிடமும் அன்புடனும், பணிவுடனும் கேட்டுக் கொள்கிறோம்.
எமது குடும்பத் தலைவி திருமதி. நிஷாந்தினி நித்திலவர்ணனின் மறைவால் துயருற்ற இந்த நேரத்தில் எம்முடன் துணைநின்று ஆறுதல் கூறிப் பல்வேறு வழிகளில் ஆதரவு வழங்கிய அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் மீண்டும் ஒருமுறை மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.