புதினங்களின் சங்கமம்

நீர்கொழும்பிலும் எட்டுப்பேரை தொற்றிக்கொண்டது கொரோனா? வைத்தியசாலை வட்டாரங்களில் ஏற்பட்டுள்ள அச்சம்!!

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 8 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நோயாளிகள் வைத்தியசாலையில் விசேடமாக அமைக்கப்பட்டுள்ள வார்ட் ஒன்றில் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நோயாளிகளில் ஒருவர் வெளிநாட்டவராவார். ஏனைய 7 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்களாவர்.

பாதிக்கப்பட்ட இலங்கையர்களில் ஒருவர் வெளிநாட்டவர்களுக்கு வழிகாட்டியாக தொழில் செய்து வருபவராவார். ஏனைய ஆறு பேரும் வெளிநாடுகளிருந்து இலங்கை வந்த இலங்கையைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களது உறவினர்களாவர்.

நேற்று கொரோனா நோயாளிகள் என சந்தேகிக்கப்பட்டு தங்கியிருந்து சிகிச்சைப் பெற்று வந்த மூன்று நோயாளிகள் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்றைய தினம் எட்டு நோயாளிகள் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டு நீர்கொழம்பு வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.