சுமந்திரன் எம்.பியால் கொலை செய்யப்பட்டவரா இந்த மூதாட்டி??
உலகில் எப்படிப்பட்ட இழப்பை சந்தித்த மனிதனும் வாழ்வதற்கு நியாயமான காரணங்கள் பல இருக்கின்றன
ஆனால் தம் காணாமல்போன உறவுகளை தேடுவதையே வாழ்வதற்கான காரணமாக கொண்டிருப்பது கொடுமையானது.
தம் காணாமல்போன உறவுகளை தேடுவது கொடுமை என்றால் அதைவிடக் கொடுமையானது அது பற்றி எந்த முடிவும் தெரியாமல் இறப்பது.
கடந்த மூன்று வருடமாக மழையிலும் வெயிலிலும் உட்கார்ந்து தம் உறவைத் தேடிய தாய் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
இதுவரை இவ்வாறு 60க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். இவர்கள் இறப்பதற்கு முன் ஒரு முடிவை பெற்றுக் கொடுப்பதற்கு தமிழ்தலைவர்கள் தவறி விட்டனர்.
தன்னை ஒரு தமிழன் (சுமந்திரன்) காப்பாற்றி விட்டான் என்று சிங்களவரான ரஞ்சன் ரமநாயக்கா பெருமையுடன் கூறுகின்றார்.
ஆனால் அந்த தமிழன் (சுமந்திரன்) யாரால் எம்.பி யானோ அவர்களை காப்பாற்ற முன்வரவில்லை.
தமிழ் இனத்தின் மிகப் பெரும் சாபக்கேடு இது!
நன்றி
தோழர் பாலன்



