ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய காவாலி கைது.!
இரு இளைஞர்கள் வீதியில் பயணிப்பவர்களுக்கும் ஏனைய வாகனங்களுக்கும் இடையூறு விளைவிக்கும் வகையிலும், விபத்து ஏற்படும் வகையிலும் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய சம்பவம் தொடர்பான காணொளியின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
நேற்று (08) மாலை நவகத்தேகம பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவினால், இந்த கைது இடம்பெற்றுள்ளது.
இதன்போது அவர் செலுத்திய மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இவ்வாறு #கைது செய்யப்பட்டவர் நவகத்தேகம பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது.

