யாழ் நகரில் ஆமிக்காம் அருகில் பலரும் அறிய குமார் நடாத்தும் விபச்சார விடுதி!! அதிகாரிகளும் வாடிக்கையாளர்களா? Photos
யாழ் ஆஸ்பத்தி வீதியில் ஓ.எல்.ஆர் சேர்ச்சுக்கு முன்னால் உள்ள படையினரின் முகாமுக்கு அருகாக செல்லும் ஒழுங்கைக்குள் குமார் என்பவனால் நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் விபச்சார விடுதி தொடர்பாக, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரும் விசனம் தெரிவித்து வருகின்றார்கள். NP VC 6361 இலக்கம் கொண்ட மோட்டார் சைக்கிளில் திரியும் குமார் என்ற குறித்த மாமா வேலை செய்யும் நபர் SPR என்ற பெயரில், படை முகாமுக்கு அருகில் உள்ள ஒழுங்கைக்குள் விடுதி நடாத்தி வருகின்றான். அவ் விடுதியில் வந்து ஆண்கள் தங்கியிருந்த பின் ஆட்டோவில் வந்து இறங்கும் விபச்சார தொழில் செய்யும் யுவதிகள் அந்த விடுதிக்குள் புகுந்து கொள்வார்களாம். தங்கியிருக்கும் ஆண்கள் விடுதியை விட்டு சென்று சிறிது நேரத்தில் அவர்களும் சென்று விடுவதாகத் தெரியவருகின்றது. குறித்த விடுதி தொடர்பாக அப்பகுதியில் வசிப்பவர்களும் அப்பகுதியில் வர்த்தகநிலையங்கள் மற்றும் அலுவலகங்களை வைத்திருப்பவர்களும் பல தடவைகள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் பொலிசாருக்கும் முறையிட்டும் எந்திவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என விசனம் தெரிவிக்கின்றார்கள். ஆகவே விடுதி நடாத்துவதைக் கண்காணிக்கும் அரச அலுவலங்களின் அதிகாரிகளுக்கும் குமார் மாமா வேலை செய்து வருகின்றானா? என்ற சந்தேகம் எழுகின்றது. அத்துடன் விடுதிக்கு அருகில் இருக்கும் படை முகாம் அதிகாரிகளுக்கும் விடுதியுடன் அந்தரங்கத் தொடர்புகள் உள்ளனவா? என்ற சந்தேகம் அப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு எழுந்துள்ளது.




