புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் 11 வயது சிறுமியை வல்லுறவுக்குள்ளாக்கிய முஸ்லீம் வியாபாரியின் கடை தீக்கிரையாக்கப்பட்டது!!

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் பரந்தன் முல்லைத்தீவு வீதியில் சிறு புடவை கடை ஒன்றை நடத்தி வருகின்ற ஒருவர் அப்பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்குட்டுபத்தியுள்ளார்.

இதனை அவதானித்து பொது மக்கள் குறித்த நபரை பொலிஸாரிடம் பிடித்துக் கொடுத்ததோடு அவரது புடவை கடையினையும் தீயிட்டு எரித்துள்ளனர். இச் சம்பவம் அண்மையில் இடம்பெற்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தற்போது நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருதாவது,

குறித்த பகுதியில் சிறு புடவை கடை நடாத்தி வருகின்ற நபர் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், அத்துமீறி தனி நபர் ஒருவரின் காணியை பிடித்து வியாபாரம் நிலையம் அமைத்து நடாத்தி வருகின்றார் என்றும் எனவே இது தொடர்பில் கண்டாவளை பிரதேச செயலாளரினால், கடந்த 2017 ஆம் ஆண்டு கரைச்சி பிரதேச சபையின் செயலாளருக்கும் 2019 ஆம் ஆண்டு பிரதேச சபையின் தவிசாளருக்கும் குறித்த நபர் சட்டவிரோதமாக கடை நடாத்தி வருகின்றார் எனவே அவரின் வியாபார அனுமதி பத்திரத்தை நிறுத்துமாறு கோரி கடிதம் எழுதியிருந்தார். ஆனால் அக் கடிதத்திற்கு பிரதேச சபையினால் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில் குறித்த நபர் 11 வயது சிறுமியை அச்சுறுத்தி வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார். இதனை பலரிடம் கூறிய போது எவரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இவரது நடவடிக்கையினை இரகசியமாக வீடியோ எடுத்த பிறிதொரு நபர் அதனை ஆதாரமாக பொலிஸாரிடம் கொடுத்து நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதோடு, ஆத்திரமடைந்த பொது மக்கள் அவரது கடையினையும் தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.