நிஷாந்த சில்வாவை ஒப்படைக்குமாறு சுவிஸை கோரவுள்ளது இலங்கை
சுவிற்சர்லாந்தில் தஞ்சமடைந்துள்ளதாக கூறப்படும் சி.ஐ.டி.யின் விசாரணை அதிகாரி நிஷாந்த சில்வாவை ஒப்படைக்குமாறு அந்த அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பது தொடர்பான பேச்சுவார்த்தையை இலங்கை அரசு ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பிலுள்ள சுவிற்சர்லாந்து தூதரகத்துடன் வெளிவிவகார அமைச்சு இதற்கான பேச்சுக்களை ஆரம்பிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
முன்னாள் சி.ஐ.டி.இயக்குனர் சனி அபேசேகர இடமாற்றம் செய்யப்பட்ட பின்னர், கடந்த மாதம் கட்டுநாயக்க விமானநிலையத்தில் இருந்து, நிஷாந்த சில்வா தனது குடும்பத்தாருடன் சிங்கப்பூர் பயணித்து, சுவிற்சர்லாந்தை சென்றடைந்துள்ளார்.
சுவிற்சர்லாந்துடனான தனது வலுவான உறவைப் பேணுவதில் இலங்கை உறுதியாக செயற்படுவதாகவும், ஆனால் பல உயர் விசாரணைகளில் ஈடுபட்டதால் நிஷாந்த சில்வாவை ஒப்படைக்குமாறு சுவிஸ் அதிகாரிகளிடம் கோருவதாகவும் அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

