புதினங்களின் சங்கமம்

இங்கிலாந்தில் 17 வயதான மனைவிக்கு கள்ளத் தொடர்பு!! மொட்டையடித்து கொடூரமாக தாக்கிய இலங்கை தமிழன் நிப்ராஸ் கைது!!

தனது மனைவியின் தலைமுடியை மொட்டையடித்து, அவரை இடுப்புப்பட்டியினால் தாக்கியதாக கூறப்படும் இலங்கை ஒருவர் இங்கிலாந்தின் மென்சஸ்டரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

45 வயதான இந்த இலங்கையரான  கலந்தர் நிப்ராஸ் எனும் தமிழ் முஸ்லீமும் அவரது 17 வயதான மனைவியும் 2004ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு சென்றனர்.

இதன்பின்னர் 2007ஆம் ஆண்டு மென்சஸ்டரில் குடியேறினர்.

அந்த காலம் தொட்டே குறித்த இலங்கையர், தமது மனைவியை கொடுமைப்படுத்தி வந்ததாக நீதிமன்றில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வேற்று நாட்டுக்கார ஆணுடன் மனைவி வேலை பார்க்கும் இடத்தில் கள்ளத் தொடர்பு இருந்ததாக அறிந்தே தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

தமது மனைவி தொழில் செய்து வந்தபோதும், கணவரான இலங்கையர் தொழில்களில் ஈடுபடவில்லை.

இந்தநிலையில், கஞ்சா பாவனை, விபச்சாரிகளுடன் தொடர்பு போன்ற தீய பழக்கங்களில் இருந்தும் மோசமான நண்பர்களிடம் இருந்தும் கணவரை காப்பாற்றும் முயற்சியின்போதே இலங்கைப் பெண், அவரது கணவரால் சித்திரவதைகளுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.