ஓ.எல் பெறுபேறுகள் சற்று முன் வெளியாகின!!

2018 கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று இரவு வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இன்று இரவு 9.00 மணிக்கு இணையத்தளத்தில் பெறுபேறுகள் வெளியிடப்பட்டன என்று அவர் கூறியுள்ளார்.

அதன்பின்னர் www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பெறுபேறுகளை பார்வையிட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஒவ்வொரு ஆண்டும் பரீட்சை பெறுபேறுகளை குறிப்பிட்ட தினங்களில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித கூறியுள்ளார்.

அதன்படி க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் மார்ச் மாதம் 28 ஆம் திகதியும், தரம் 05 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதியும், க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் டிசம்பர் மாதம் 25 ஆம் திகதியும் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2018 கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையில் 656, 641 பரீட்சாத்திகள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

error

Enjoy this blog? Please spread the word :)