புதினங்களின் சங்கமம்

யாழில் மகளின் சாமத்திய வீட்டை கொண்டாடிய ஜேர்மன் குடும்பஸ்தரால் மருமகள் கர்ப்பம்!!

 

கடந்த யூன் மாதம் ஜேர்மனியிலிருந்து யாழ் வந்து பெரும் எடுப்பிலும் செலவிலும் மகளின் சாமத்தியவீடு கொண்டாடிய 45 வயதான குடும்பஸ்தர் மனைவியின் அண்ணனின் மகளை கர்ப்பமாக்கியுள்ளார். யாழில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் உயர்தரம் கற்கும் குறித்த மாணவி தொடர் வாந்தி காரணமாக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே மாணவி கர்ப்பமான விடயம் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து பெற்றோர் மேற்கொண்ட விசாரணையின் போதே ஜேர்மனியிலிருந்து வந்த அத்தையின் கணவரின் திருவிளையாடல் வெளியாகியுள்ளது.

தன்னைக் கர்ப்பமாக்கியவர் யார் என்பதை முதலில் பெற்றோருக்கு தெரியவிக்க மாணவி மறுத்துள்ளார். இதன் பின்னர் மாணவிக்கு வீட்டில் வந்து தனிப்பட்ட ரீதியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் மீது பெற்றோர் சந்தேகப்பட்டு அந்த ஆசிரியரை விசாரணைக்கு உட்படுத்தி பொலிசாரிடம் முறையிட முற்பட்ட போதே மாணவி தன்னை கர்ப்பமாக்கியவர் யார் என்ற தகவலை பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

மாணவியின் பெற்றோர் ஆசிரியரின் வீட்டிற்கு வந்து முறையற்ற நடவடிக்கையால் இளம் குடும்பஸ்தரான குறித்த ஆசிரியர் பெரும் அவமானத்துக்கு உள்ளானதாகவும் மனைவி மற்றும் மனைவியின் பெற்றோரால் குறித்த ஆசிரியர் கடும் அழுத்தத்துக்கு உள்ளானதாகவும் ஆசிரியரின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

இதே வேளை மாணவியின் பெற்றோர் தற்போதும் மாணவி கூறுவதை நம்பாமல் இருப்பதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரியவருகின்றது.