புதினங்களின் சங்கமம்

மட்டக்களப்பு நாவற்கேணியில் பட்டப்பகலில் பெண் செய்த கேவலமான வேலை (Video)

ஈழத்தில் தமிழராக ஒரே தாய் பிள்ளைகளாக வாழும் எம்மவரை பிரித்தாள சில கிறிஸ்தவ மிசனரிகளின் மாயவலைகளில் சிக்கி சகோதரிகளே நீங்களாக உங்களை கேவலப்படுத்தாதீர்கள்!!!
இச்சம்பவம் இன்று காலை 9.00 மணி அளவில்( 09.11.2019) மட்டக்களப்பு நாவற்கேனி பகுதியில் ஒவ்வொரு சைவசமயத்தவரின் வீட்டு கதவை தட்டி நல்வழிப்படுத்துகின்றோம் என்று கூறி மதமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட சகோதரிகள். மரியாதை செய்து வழியனுப்பியுள்ளார்கள். ஆனால் இனி இவ்வாறு வருபவர்களுக்கு என்னபாடம் புகட்டலாம் ? தயவு செய்து கூறுங்கள்……

ஈழத்தில் உள்ள தமிழரில் சைவராக உள்ள எம்மவர் மதம்மாறுவது அதிகரிப்பிற்கு ஒரே காரணம் வறுமை யுத்தத்தின் தாக்கம் .ஏன் சைவர் மாத்திரம் மதம் மாறுதல் வேண்டும் .இலங்கையில் சைவமதத்தவரிடையே இந்தியா போன்று பெரிதளவில் மூடநம்பிக்கைகள் ,சாதியால் இழிவுபடுத்திய கலவரங்கள் போன்ற தாக்கங்கள் காரணமாக பகுத்தறிவான சைவர் மதம்மாறியதாக இதுவரை சரித்திரம் இல்லை .
ஆனால் வறுமையும் யுத்தம் நடந்த பகுதிகளும் தந்தையை இழந்த குடும்பங்கள் கிறிஸ்தவ திருச்சபை பொருளாதர உதவியால் மதம்மாற்றப்படுகின்றார்கள்,
மதம் மாறுதல் நியாயமானதா?
மதம் மாற முன்னர் அது தொடர்பாக சற்றுசந்திப்போமேயானால் உங்கள் மதத்தில் குறிப்பிடப்பட்ட வாழும் விதிமுறைகளின் படி நீங்கள் நூறு சதவீதம் வாழுகின்றீர்களா? அப்படி வாழ்ந்தும் உங்களால் நிம்மதியாக வாழ முடியவில்லை எனில் நீங்கள் மதம் மாறுவது நியாயமானது என கருதலாம். எனினும் எவரும் நூறு வீதம் மதத்தைப் பின்பற்றுவது இல்லை என்பது மட்டும் உறுதி.
இரண்டாவதாக சிந்திக்க வேண்டிய ஒன்று கடவுளானவர் தன்னை குறிப்பிட்ட ஓர் மதத்தின் ஊடாக வழிபடும் ஒருவருக்கு மட்டுமே உதவுவார் எனில் அவரைவிட சுயநலம் பிடித்தவர் வேறு ஒருத்தரும் இருக்க மாட்டார். பின்னர் மற்றவரிகளுக்கு உதவும் மனிதப்பண்பு கூட இல்லாத ஓருவருக்கு கடவுள் பட்டம் வழங்கி ஏன் வழிபட வேண்டும்?
ஒருவர் தன் மதத்தைப் பரப்புவதற்கு ஏன் முயல்கின்றார்? அவருக்கு என்ன இலாபம். இன்னொரு மதத்தில் இருப்பவரை குறிப்பிட்ட மதத்திற்கு மாற்றிக் கொடுத்தால் ஏதாவது சன்மானம் வழங்கும் திட்டத்தினை கடவுள் அறிமுகப்படுத்தியுள்ளாரா?
எம் கடவுள் சர்வ பலமும் படைத்தவர். எல்லாம் அறிந்தவர் எனக் கூறும் மதம் மாற்றும் வல்லுனர்களே, அவ்வாறு சர்வ வல்லமை படைத்த உங்கள் கடவுளுக்கு எல்லாரையும் தன்னைப் பின்பற்ற வழிபட வைக்கத் தெரியாதா?
மதங்களினால் மக்களிற்கு எந்தவித நன்மையும் என்றும் ஏற்படப்போவதில்லை, ஏற்பட்டதும் இல்லை. மதங்களானது தலைமைத்துவங்களை தக்க வைத்துக்கொள்ளவோ அல்லது தமது செல்வாக்கை வளர்த்துக்கொள்ளவோ சிலருக்குத் தேவைப்படுகின்றது இந்த உண்மை தெரியாது பலரும் அதற்கு அடிமையாகின்றனர்.
கடவுள் எல்லாருக்கும் பொதுவானவர். அவர் எல்லா உயிர்களின் மீதும் அன்பு செலுத்துபவர் என்றெல்லாம் கூறுகின்றீர்களே, அப்படியாயின் அவரிடம் செல்லும் மார்க்கமான மதங்கள் ஏன் நிறுவனப்படுத்தப்பட வேண்டும். ஏன் அங்கும் பதவிநிலைகள். எல்லோரும் ஆண்டவரின் அடியவர்கள் எனில் அடியவர்களில் மேல்தர அடியவர்கள் இரண்டாம் தர அடியவர்கள் என ஆண்டவர் வகுத்துள்ளாரா?
இவ்வாறெல்லாம் உங்களிடம் மத மாற்றத்தைப் பற்றி கதைப்பவர்களிடம் கேளுங்கள். நீங்கள் மதம் மாற்றல் பிரச்சாரம் செய்பவராக இருந்தால் பின்னூட்டலில் விளக்கத்தினை வழங்குங்கள்

Thanks – Facebook