யாழ் பல்கலைக்கழகத்தின் மற்றுமொரு மருத்துவபீட மாணவன் பர்மிதன் தற்கொலையா?? அதிர்ச்சித் தகவல்கள்
கனகராயன் குளம் குறிசுட்டகுளத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட யாழ்ப்பாணப்பல்கலைக்கழக மருத்தவபீட மாணவன் பாலசுப்பிரமணியம் பர்மிதன் காட்டுக்குள் சென்ற நிலையில் காணாமல் போனதாகவும் அதன் பின்னர் தேடுதல் நடந்து அவரது சடலம் கண்டு பிடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகிய நிலையில் குறித்த மாணவன் காட்டுக்குள் சென்று தற்கொலை செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பொறுப்பற்ற தன்மையால் குறித்த மாணவன் விரக்தியில் இருந்ததாகவும் கடிதம் எழுதி வைத்திருந்ததாகவும் இதன் காரணமாகவே தற்கொலை செய்திருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இருப்பினும் இந்தத் தகவல்களை உறுதி செய்யமுடியவில்லை… இருப்பினும் இந்த மாணவன் தொடர்பாக உரிய விசாரணை நடத்துவதற்கு சம்மந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு இந்தத் தகவலைக் கொண்டு செல்ல பகிர்ந்து கொள்ளுங்கள் அன்பு வாசகர்களே!!!





