புதினங்களின் சங்கமம்

மன்னார் சிலாவத்துறையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடலில் உயிரிழப்பு

சிலாவத்துறை கடலில் இன்று அதிகாலை மீன்பிடிக்கச் சென்ற 28 வயதுடைய யாக்கோபு ரெஜினோல்ட் என்பவர் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் இன்று காலை மீன்பிடிக்கச் சென்று திரும்பும் வழியில் ஏனைய படகு ஒன்று பழுதாகிய நிலையில் உதவி கோரியபோது இவர் அக் குறித்த எந்திர கோளாறாகிய படகை திருத்திக் கொண்டிருந்தபோது எந்திரத்தில் இருந்து பாய்ந்த தகடு ஒன்று உயிரிழந்தவரின் கையிலும் கழுத்திலும் மிக ஆழமாக இறங்கியுள்ளது. குறித்த விபத்து காலை 7:30 மணியளவில் இடம்பெற்றவுடன் கடலில் இருந்து கரைக்குப் சுமார் 17km தூர தொலைவிலிருந்து வரும் வழியில் கடலில் உயிரிழந்துவிட்டார் .குறித்த இளைஞனின் உடல் சிலாவத்துறை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பின்னர் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக மன்னார் பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Image may contain: 1 person, standing and outdoor