புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழில் சம்பவம்!! சுவிஸ்லாந்திலிருந்து வந்த 50 வயது அத்தானுடன் 35 வயது அரச அதிகாரியான குடும்பப் பெண் தலைமறைவு!!

யாழில் உள்ள அரச திணைக்களம் ஒன்றில் அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றும் 35 வயதான 2 பிள்ளைகளின் தாய் சுகயீன விடுமுறை முடிவடைந்தும் எந்த வித முன்னறிவித்தலுமின்றி கடமைக்கு சமூகமளிக்கவில்லை என தெரியவருகின்றது. இது தொடர்பாக குறித்த திணைக்கள உயர் அதிகாரிக்கு பெண்ணின் கணவர் கொடுத்த முறைப்பாட்டின் படி குறித்த பெண் சுவிஸ்லாந்திலிருந்து வந்த தனது அக்காவின் கணவருடன் தலைமறைவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. தற்போது குறித்த பெண்ணுக்கு பதவி வறிதாக்கல் கடிதம் அனுப்ப்பட்டுள்ளது. குறித்த பெண் உத்தியோகத்தர் சுகயீன விடுமுறையில் நிற்பதாக அலுவலகத்திற்கு ஏற்கனவே அறிவித்திருந்தார் என்றும் அதன் காலம் முடிவதற்கு முன்னரே கணவர் அலுவலகத்திற்கு வந்து பதவியை வறிதாக்குமாறு அங்கு முறையிட்டதாகவும் தெரியவருகின்றது. தற்போது சுகயீன விடுமுறைக் காலம் முடிவடைந்தும் அலுவலகத்திற்கு சமுகமளிக்காத காரணத்தால் தற்போது பதவி வறிதாக்கல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த பெண் உத்தியோகத்தரின் கணவர் வாகன சாரதி எனவும் மதுவுக்கு அடிமையானவர் எனவும் இதன் காரணமாக பெண் உத்தியோகத்தரை பலதடவைகள் தாக்கியும் அலுவலகத்தில் வந்து பெண் உத்தியோகத்தருடன் பல தடவைகள் தரக்குறைவாக நடந்து கொண்டவர் எனவும் அலுவலகத்தில் கடமையாற்றுபவர்கள் தெரிவித்துள்ளார்கள். பெண் உத்தியோகத்தரின் சுவிஸ்லாந்தில் வாழ்ந்துவந்த அக்கா கடந் சில ஆண்டுகளுக்கு முன் கொரோனா நோய் வந்து மரணமடைந்துள்ளார். அத்துடன் அவர்களுக்கு விசேட தேவையுள்ள மகன் ஒருவரும் உள்ளதாகத் தெரியவருகின்றது. இந் நிலையிலேயே சுவிஸ்லாந்திலிருந்து வந்த அக்கா கணவன் குறித்த பெண் அலுவலரை சுவிஸ்லாந்துக்கு அழைத்துச் சென்றிருக்கலாம் என அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த பெண் உ்த்தியோகத்தரின் பிள்ளைகள் தற்போது அம்மம்மாவு்ன் தங்கியுள்ளார்கள். இது தொடர்பாகவும் பெண் உத்தியோகத்தரின் கணவர் அம்மம்மாவுடன் முரண்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.