யாழ் விமான நிலைய ரிக்கட் குறைந்த விலையி்ல் !! போலியான தகவல்கள்!! தயவு செய்து பகிருங்கள்
பல நண்பர்களின் யாழ்ப்பாணத்திலிருந்தான விமான சேவை தொர்டபிலும், பயண திகதி மற்றும் பயணசீட்டின் பெறுமதி தொடர்பான கேள்விகளின் பதிலாக இந்த பதிவு,யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையம் (Jaffna International Airport – JIA) உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.
உள்கட்டுமாணங்கள் உடனடியான, பிராந்திய விமானசேவையினை நடத்துவதற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டு சேவைகள் தொடங்கிவிட்டது, ஆனாலும் விமான நிலைய செயற்பாடு தொடர்பான தேவைகள்பல இன்னமும் பூரணமாக இயங்க தொடங்கவில்லை, உபகரணங்கள், இயந்திரங்கள் பல இன்னமும் கொண்டுவரப்படவில்லை. இன்னமும் சிறிதுகாலம் தேவைப்படும் இந்த தேவைகளை பூர்த்திசெய்ய.
விமான சேவைகள் தொடங்குவது குறித்த தீர்மானங்கள் இன்னமும் இறுதிசெய்யப்படவில்லை, பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.
இந்தியாவின் ALLIANCE AIR விமானசேவை, இந்த மாத இறுதியிலேயோ அல்லது நவம்பர் மாத முதல் வாரத்திலோ தினசரி பயணிகள் சேவையினை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பயணசீட்டு விலை பற்றிய உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் எதுவும் இன்றுவரை வெளிவரவில்லை. தற்போது இணையத்தில் பல பிழையான தகவல்கள் உலாவுகின்றது. முக்கியமாக பயணசீட்டு முன்பதிவுகள் தொடங்கிவிட்டதாகவும், குறைந்த விலையில் சீட்டுக்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும், சமூக வலைத்தளம் மற்றும் இணையத்தில் வேகமாக பகிரப்படுகிறது.
எனக்கு தெரிந்தவரை இது உண்மைக்கு புறம்பான தகவல், நீங்கள் ஏமாற்றப்படக்கூடும். இவ்வாறு இணையம் மூலமாகவோ, நேரடியாகவோ முன்பதிவு கட்டணம் என்று ஒருவரிடம் ரூபா 500/- படி 500 பேரிடம் அவர்கள் பெற்றுக்கொண்டால் கூட, ரூபா 250,000/- அவர்களுக்கு கிடைக்கும், பின்னர் ஏதாவது காரணம் சொல்லி பணத்தை தராமல் விடுவார்கள், உங்களுக்கு ரூபா 500/- தான் நட்டம், ஆனால் அவர்கள் இலட்சாதிபதிகள் ஆகிவிடுவார்கள். ஆகவே அவதானமாக இருங்கள், எதிர்வரும் தினங்களில் வெளிவரக்கூடிய உத்தியோகபூர்வ அறிவித்தல்களை பார்த்து அதன்படி நடவுங்கள்.இது ஒரு நட்புரீதியான தகவல் மட்டுமே.
தகவல்: குலசிங்கம் வசீகரன்

