Vampan memesபுதினங்களின் சங்கமம்

பெடியல் கொஞ்சம் பொறுங்கோடா!! யாழ் முத்தவெளியில பிளைட் இறங்கிட்டுது!!

பலாலி விமான நிலையம் தற்போது சர்வதேச விமான போக்குவரத்துக்காக திறக்கப்படவுள்ளது.

பலாலி விமான நிலையம் என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டு JAFFNA AIR PORT என்று பெயரிடப்பட்டுள்ளது.

கொஞ்சப் பெடியளுக்கு இப்ப என்ன பிரச்சினை எண்டா JAFFNA எண்டதையும் யாழ்ப்பாணம் எண்டு மாத்த வேணுமாமெண்டு குத்தி முறியுறாங்கள்.

“எட பெடியள்! உங்கட தமிழ்ப் பற்று புல்லரிக்க வைக்குதுதான். சரி! யாழ்ப்பாணம் (YAZHPPANAM) எண்டே இங்கிலீசில வைச்சா வாஷிங்டனில இருந்தோ வான்கூவரில இருந்தோ வாற விமானிக்கு கையில ஒரு தமிழ்-ஆங்கில அகராதியும் கொடுத்து அனுப்ப வேணும் கண்டியளோ…”

ஓடுற விமானி ஒடுற பிராக்கில இருக்க அவனுக்கெங்கே டிக்ஸநெறி பாக்க நேரமிருக்கும்?

துணை விமானி டிக்ஸநெறியை பிரிச்சு பக்கத்தை தேடிப் பிடிக்கிறதுக்கிடையில கல்லுண்டாய் வெளியில இருந்து நவாலிக்கு போற றோட்டுத்தான் மேல இருந்து பாக்க Ran way மாதிரி தெரியும்.

அதுதான் YAZHPPANAM விமான நிலையமெண்டு உடன அதில இறக்கினபிறகுதான் அட! இது அதில்லையெண்டு அவனுக்கு புரியும்.

“இதென்ன நாசமறுந்த இடமடா” எண்டு இங்கிலீசில சொல்லிக்கொண்டு அவன் கதவைத்திறந்து,

காத்தோட காத்தா கல்லுண்டாய் வெளியில மாநகரசபை கொட்டுற கழிவுகளின் மணம் தாங்கமுடியாமல் மூக்கப் பொத்திக் கொண்டு வெளிய வர, கல்லுண்டாய் வெளியால சைக்கிளில போன நம்மட ஒண்டு,

“இதென்னடா பிளேன கொண்டுவந்து றோட்டில இறக்கிறாங்கள் ”

எண்டு விடுப்புப் பாக்க கிட்டப்போக, கதவைத் திறந்து வெளிய வந்த விமானி,

Where is the YAZHPPANAM air port?

எண்டு அமெரிக்கன் இங்கிலீசில கேப்பான்.
யாழ்ப்பாணம் எண்டது மட்டும் விளங்கின நம்மட விடுப்புப் பாக்க போனது

“அந்தா இருக்குதெண்டு” யாழ்ப்பாணத்தை நோக்கி கையைநீட்டி ரெலிக்கொம் ரவருக்கு நேரே காட்டிவிடும்.

சரியெண்டு அவன் திரும்ப கிளப்பிக் கொண்டுபோய் ரெலிக்கொம் ரவரைப் பார்த்து இதுதான் YAZHPPANAM air port எண்டு முத்தவெளியில இறக்கி, லேணேர்ஸ் காரர் வாகனங்கள் ஓட்டப்பழக்கிற இடத்தில பிளாஸ்ரிக் கூம்புகள் வரிசையாக இருக்கிறதை பார்த்துவிட்டு இங்கினேக்கதான் நிப்பாட்டுறது போல எண்டு அதுக்குள்ள வலது பக்கமா வளைச்சுக் கொண்டுபோய் பிளேன விட அது நேரபோய் முனியப்பகோயில் முன்மண்டபத்தை உடைச்சப் போட்டுத்தான் நிக்கும்.

“இல்லை தெரியாமல்தான் கேக்கிறன் முனியப்பர் கோயில் முன்மண்டபத்தை உடைக்கிறதுக்கு ஏன் இப்பிடி அவசரப்படுறியள்?”

நன்றி பேஸ்புக்
Copied