Home புதினங்களின் சங்கமம் கிளிநொச்சி விபத்தில் குடும்ப பெண்ணின் கால் துண்டிப்பு.

கிளிநொச்சி விபத்தில் குடும்ப பெண்ணின் கால் துண்டிப்பு.

கடந்த சனிக்கிழமை(29) கிளிநொச்சி டிப்போ சந்தியில் இடம் பெற்ற விபத்தில் குடும்ப பெண்ணின் கால் துண்டிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள் பயணித்த சுஜிகரன் சுசிகலா வயது 45 என்ற மூன்று பிள்ளைகளின் தாயின் இடது கால் இவ்வாறு துண்டிக்கப்பட்டுள்ளது.

A9 வீதியில் வவுனியாவில் இருந்து டிப்பர் வாகனம் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துள்ளது.

குறித்த பெண் யாழ்ப்பாணத்திலிருந்து வவனியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பேருந்துக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் பயணித்து, வலது பக்கம் திரும்ப முயற்சித்துள்ளார்.

டிப்பர் வாகனம் இவர் மீது மோதியுள்ளது.

இதன் போது விபத்து இடம்பெற்றதாக கிளிநொச்சி போக்குவரத்து பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவத்தின் போது பலத்த காயங்களுக்கு உள்ளாகி இடது கால் சிதைந்த நிலையில், அந்தப் பெண் கிளிநொச்சி ச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட நிலையில் இடது கால் வைத்தியர்களினால் துண்டிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பின் டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் விசாரணைகளை கிளிநொச்சி போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்