Home புதினங்களின் சங்கமம் அம்பாறையில் மாணவிகளை ருசி பார்த்த பின் பரீட்சை மார்க் அதிகமாக போட்ட ஆசிரியர் பயிற்சி கலாசாலை...

அம்பாறையில் மாணவிகளை ருசி பார்த்த பின் பரீட்சை மார்க் அதிகமாக போட்ட ஆசிரியர் பயிற்சி கலாசாலை விரிவுரையாளர் பிடிபட்டது எப்படி?

அம்பாறை அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையில், பயிற்சி மாணவிகள் தொடர்பான ஒரு அதிர்ச்சியளிக்கும் முறைப்பாடு பொலிஸாரின் கவனத்துக்கு வந்துள்ளது.

மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காண்பித்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் 55 வயதுடைய விரிவுரையாளர் ஒருவர் தொடர்பிலேயே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஆனால், இவ்விடயத்தில் மாணவிகள் நீண்டகாலம் மௌனம் காத்ததற்கான காரணம் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த விரிவுரையாளர், மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கும் முக்கிய பொறுப்பில் இருந்ததாகவும், முறைப்பாடு செய்தால் தங்களது மதிப்பெண்கள் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தில் மாணவிகள் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆரச்சிக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவிகளிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த 55 வயதுடைய விரிவுரையாளர் நேற்று அம்பாறை பிரதேச சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments