Home புதினங்களின் சங்கமம் மன்னாரில் 12 வயது சிறுமி ஒரே நேரத்தில் பலரால் வல்லுறவு! 17 வயது காவாலி உட்பட...

மன்னாரில் 12 வயது சிறுமி ஒரே நேரத்தில் பலரால் வல்லுறவு! 17 வயது காவாலி உட்பட இருவர் கார், ஐஸ் போதைப்பொருளுடன் கைது! பலர் தேடப்படுகின்றனர்!

மன்னார், பேசாலை உதயபுரம் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி தொடர்பான பாலியல் துஷ்பிரயோக சம்பவம் ஒன்று மன்னார் சந்திபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் 17 வயது சிறுவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் கார் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் 17 வயது சிறுவன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, மற்றைய சந்தேகநபர் கைது செய்யப்படும் போது அவனிடமிருந்து சுமார் 5 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் ஏனைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பேசாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments