புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவு தேவிபுரத்தில் மனைவி மீது சந்தேகம்! வாளால் அறுத்துக் கொன்ற கணவன்!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, தேவிபுரம் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக 4 பிள்ளைகளின் தாயார் ஒருவர் வாள்வெட்டு – தாக்குதலுக்கு இலக்கான நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த தாக்குதலை குடும்பப்பெண்ணின் கணவனே நிகழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. அவரும் காயமடைந்து புதுக்குடியிருப்பு பிரதேச மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேவிபுரம் பகுதியில் வசித்துவரும் குறித்த தம்பதியினரிடையே நீண்டகாலமாக குடும்பத் தகராறு நிலவி வந்துள்ளது. கணவனுக்கு மனைவி மீது கள்ளத் தொடர்பு என்ற சந்தேகம் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், ஏற்பட்ட கடுமையான வாய்த்தர்க்கம் எல்லை மீறியதில் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

“குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுபவர்கள் அல்லது அது குறித்த தகவல் தெரிந்தவர்கள் இலங்கையில் 1938 (பெண்கள் உதவி எண்) அல்லது 119 என்ற அவசர இலக்கங்களுக்கு அழைத்து உதவி பெறலாம்.”

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x