முல்லைத்தீவு வைத்தியசாலையில் தவறான மருந்து கொடுத்ததில் இளைஞன் பலி!
சாதாரண சிகிச்சைக்காகச் சென்ற புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 25 வயது இளைஞன் ஒருவர், முல்லைத்தீவு – மாஞ்சோலை வைத்தியசாலையில் தவறான மருந்து வழங்கப்பட்டதால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்த துயர சம்பவம் தொடர்பில் என்னும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியவரவில்லை.
வைத்தியசாலை ஊழியர்களின் அலட்சியம் மற்றும் மருந்துச் சீட்டைச் சரியாக வாசித்துச் செயற்படாததே இத்தவறுக்குக் காரணம் என உயிரிழந்தவரின் உறவினர்களும் பொதுமக்களும் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த இளைஞனின் மருந்து சீட்டுக்கு பதிலாக வேறொருவரின் மருந்து சீட்டை பயன்படுத்தி இந்த இளைஞனுக்கு மருந்தை மாற்றி செலுத்தியதாக கூறப்படுகிறது.
வைத்தியசாலையில் தாயின் மடியிலேயே அவ்விளைஞரின் உயிர் பிரிந்த சம்பவம் வேதனையளிக்கிறது.
விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த இளைஞனுக்கு நீதி கிடைக்க வேண்டும், வைத்தியசாலை நிர்வாகம் இந்த இளைஞனுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.

