கனடாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்க ஆட்டிறைச்சி சாப்பிட வந்த அங்கிள்! ஒரு இரவில் ஒன்டரை லட்சம் இழந்தது எப்படி?
கனடாவிலிருந்த யாழ்ப்பாணத்திற்கு வந்து தங்கியிருந்த 65 வயதான வயோதிபர் ஒரே நாளில் ஒன்டரை லட்சம் ரூபாவை அநியாயமாக இழந்துள்ளார்். கடந்த சனிக்கிழமை இரவு றீச்சாவுக்கு நெடுந்தீவு ஆட்டிறைச்சி சாப்பிடும் ஆசையில் காரைநகரிலிரு்ந்து தனது மருமக்கள், உறவுகளுடன் 2 ஹயஸ் வாகனங்களில் குழந்தைகள், பெண்கள் அடங்களாக 26 பேருடன் சென்றுள்ளார். அங்கு நுழைவுக்கட்டணங்கள் உட்பட உணவுக்கான கட்டணங்கள் அனைத்தையும் செலுத்தி உள்ளே நுழைந்து சாப்பிடச் சென்றவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அவர்களுடன் சென்ற சிறுவர்களுக்கு கூட எந்தவிதமான உணவும் கிடைக்கவில்லை என்பது ஒரு புறம் இருக்க தண்ணீர்ப் போத்தல் கூட அவர்களுக்கு கிடைகாது கடும் அவதிப்பட்டுள்ளார்கள்.
இறுதியில் உணவுக்காக அலைந்து திரிந்து விட்டு இரவு 8 மணியளவில் அங்கிந்து வெளியேறி பளைப் பகுதியில் உஎள்ள ஹோட்டல் ஒன்றில் இரவுச் சாப்பாட்டை முடித்துள்ளார்கள். குறித்த ஹோட்டலில் றீச்சாவில் உணவு கிடைக்காத பல குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறி வாகனங்களில் கும்பலாக வரத் தொடங்கியதால் அங்கும் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டதாக தெரியவருகின்றது.
காரைநகரிலிருந்து இரு வாகனங்களை 65 ஆயிரம் ரூபாவுக்கு வாடகைக்கு அமர்த்தி றீச்சா சென்று அங்கு 3500 ரூபா மற்றும் 2000 ரூபா உணவுப் பற்றுச் சீட்டு வாங்கி 75 ஆயிரம் ரூபாவுக்கு மேல் செலவு செய்து சாப்பாட கிடைக்காது மேலும் ஒரு ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டு வந்த செலவாக கனடா அங்கிள் ஒரே இரவில் ஒன்டரை லட்சம் ரூபாவை றீச்சா பாஸ்கரனின் லீலைகளால் செலவு செய்துள்ளதாக கனடா அங்கிளின் உறவு சமூகவலைத்தளததில் அழுதுள்ளது.
இவ்வளவுக்கும் சாப்பிடச் சென்றவர்களுக்கு மீளவும் பணம் செலுத்தப்படும் என கூறியுள்ள பாஸ்கரன் இவர்கள் தமது பற்றுச்சீட்டை தொலைபேசியில் அனுப்பியும் பணம் திருப்ப கொடுக்கவில்லை என கூறியுள்ளார்கள். அடுத்த நாள் ஞாயிறு, திங்கள் குறித்த உணவுத் திருவிழாவுக்குச் செல்வதற்காக முன்பதிவு செய்தவர்களின் பணமே சிலருக்கு கொடுகு்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
எல்லாச் செப்படி வித்தைகளும் செய்த பின்னரம் பாஸ்கரன் தற்போதும் தன்னை நல்லவனாகவே காட்டிக் கொண்டிருப்பது மிகவும் வேடிக்கையாக உள்ளது.

