யாழ்ப்பாணம், மாதகல் குருமண்துறை கடலோரப் பகுதியில் இன்று (27) அதிகாலை இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில், போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பெருமளவிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடற்படை கட்டளைப் பிரிவினர் மற்றும் SLNS அஃபோ (SLNS Agbo) முகாம் வீரர்கள் இணைந்து இந்த அதிரடி சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் படகு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டதுடன், சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் தொடர்பிலும், சந்தேகத்திற்குரிய கடத்தல் நடவடிக்கை தொடர்பிலும் இலங்கை கடற்படையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்..





