Home புதினங்களின் சங்கமம் லண்டன் நகரில் இடம்பெற்ற விபத்தொன்றில் இலங்கை மாணவி பலி!

லண்டன் நகரில் இடம்பெற்ற விபத்தொன்றில் இலங்கை மாணவி பலி!

லண்டன் நகரில் இடம்பெற்ற விபத்தொன்றில் இலங்கை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் மெலீஷா பிரேமரத்ன என்ற 16 வயதுடைய மாணவி என தெரிவிக்கப்படுகிறது.

தனியார் பாடசாலையொன்றில் 12 ஆம் தரத்தில் கல்வி பயிலும் இவர், கடந்த வியாழக்கிழமை (24) காலை 8.15 மணியளவில் பாடசாலைக்கு நடந்து சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வீதியில் பயணித்த காரொன்று மெலீஷா மீது மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 68 வயதுடைய காரின் சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மெலீஷா பிரேமரத்னவின் மறைவு குறித்து, “அவள் எங்கள் வாழ்க்கையின் ஒளி. அவள் இல்லாத ஒவ்வொரு நாளும் நாங்கள் அவளை நினைவில் கொள்கிறோம்…” என அவளது குடும்ப உறவினர்கள் உருக்கமான குறிப்பொன்றைப் பதிவிட்டுள்ளனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments