புதினங்களின் சங்கமம்

செம்மணியில் தொடரும் அதிர்ச்சி: தாயத்து மற்றும் நாணயத்துடன் புதிய தடயங்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் – செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 49-வது நாளில், மேலும் 15 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் 11 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாகத் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண நீதிவான் செ.லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆய்வில், தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா, சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் குழுவினருடன் தடயவியல் பொலிஸார், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் நல்லூர் பிரதேச சபை ஊழியர்களும் கலந்துகொண்டனர்.

இதுவரையிலான அகழ்வாராய்ச்சியில் மொத்தம் 539 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அதில் 524 தொகுதிகள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன. மேலும், 516-வது இலக்கமிடப்பட்ட எலும்புக்கூட்டின் இடுப்புப் பகுதியில் தாயத்து போன்ற ஒரு பொருளும், மணல் குவியலிலிருந்து இலங்கை ஒரு ரூபாய் நாணயமும் சான்றுகளாகக் கைப்பற்றப்பட்டுள்ளன.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x