புதினங்களின் சங்கமம்

சிவமோகனின் அந்தமாதிரி தொடர்பான பெண்ணுக்கு சிவமோகன் கொடுத்த பதவி!! நடந்தது என்ன?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைக்கோ, தமிழ் அரசு
கட்சியின் தலைமைக்கோ தெரியாமல் தமிழ் அரசு கட்சியின் சில உறுப்பினர்கள்
“தில்லாங்கடி“ வேலை பார்த்து, பெண் உறுப்பினர் ஒருவரை பிரதேசசபை
உறுப்பினராக்கிய விவகாரம் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு
கூட்டத்தில் பூதாகரமாக வெடித்தது.

இந்த “தில்லாங்கடி“ வேலையை பார்த்த முல்லைத்தீவு எம்.பி சிவமோகன், தமிழ்
அரசு கட்சியின் பொருளாளர் கனகசபாபதி கூட்டணியை கடுமையான கண்டித்த
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இந்த நியமனத்தை உடனடியாக நிறுத்த
மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை செய்யுமாறு தமிழ் அரசு கட்சியின்
செயலாளரிற்கு உத்தரவிட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பு பிரதேசசபையின் உடையார் கட்டு வட்டாரத்தில்
போட்டியிட்ட ரெலோ உறுப்பினர் ஒருவர் வெற்றியீட்டினார். எனினும், அண்மையில்
அவர் தனது பதவியை விட்டு விலகினார். சுழற்சிமுறையில் பதவி வழங்கும்
நடைமுறைக்கமைய ரெலோ அவரது வெற்றிடத்திற்கு இன்னொரு உறுப்பினரை நியமிக்க
நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.

இதற்குள், தமிழ் அரசுக்கட்சியின் எம்.பி சிவமோகன், தனக்கு நெருக்கமான
ஒரு பெண்மணியை அந்த வெற்றிடத்திற்கு நியமிக்கும் கைங்கரியத்தை இரகசியமாக
மேற்கொண்டார். தமிழ் அரசுக்கட்சியின் “யாழ் முதியோர் அணி“ எந்த
கட்டுப்பாட்டிற்குள்ளும் இல்லாமல் தனித்து இயங்குவதால், அவர்களின் மூலம்
காரியத்தை முடித்தார்.

தமிழ் அரசு கட்சியின் பொருளாளர் பொ.கனகசபாபதியின் மூலம், வெற்றிடமான
இடத்திற்கு, சிவமோகன் தனக்கு நெருக்கமான பெண்மணியை நியமிக்கும் ஆவணங்களை
தேர்தல் செயலகத்திற்கு அனுப்பினார். அவரது நியமனம் வர்த்தமானி மூலம்
அறிவிக்கப்பட்டும் விட்டது.

இதன்பின்னரே விடயத்தை அறிந்த ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன்,
இன்று (8) நாடாளுமன்ற குழு கூட்டத்தில் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார்.
இது தமிழ் தேசிய கூட்டமைப்பா, அல்லது கட்டாக்காலிகளின் கூடாராமா என காட்டாக
கேள்வியெழுப்பினார்.

இப்படியொரு சம்பவம் நடந்ததே தனக்கு தெரியாது என மாவை சேனாதிராசா அலங்க
மலங்க விழித்தார். இன்றைய கூட்டத்தில் தமிழ் அரசு கட்சியின் செயலாளர்
கி.துரைராசசிங்கமும் கலந்து கொண்டிருந்தார். கட்சி செயலாளரான தனக்கே இது
தெரியாதென்றார்.

இந்த நடவடிக்கை பிழையானது என புளொட் தலைவர் த.சித்தார்த்தன்,
கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் கண்டித்தனர். ஏனைய
உறுப்பினர்களும் கூட்டாக கண்டித்தனர்.

இந்த நியமனத்தை நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என இரா.சம்பந்தன், கட்சியின் செயலாளரிற்கு அறிவுறுத்தினார்.<