ஹோட்டல் போட்ட முஸ்லீம்!! வன்னியில் முன்னாள் போராளியை பழிவாங்கும் பேரினவாத சிங்கள காவல்துறை (Video)
வடதமிழீழம்: வவுனியா கனகராயன்குளம் பகுதியில் வசிக்கும் முன்னாள் போராளி கெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யபட்டு நீதி மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கபட்டுள்ளார்.
குறித்த நபரது வீட்டுவளாகத்தில் 4 கிராம் கெரோயின் இருந்ததாக தெரிவித்து புளியங்குளம் விசேட அதிரடிபடையினரால் கடந்த சனிக்கிழமை கைதுசெய்யபட்டு, கனகராயன்குளம் பொலிஸ்நிலையத்தில் ஒப்படைக்கபட்டார்.
அதன்பின்னர் கனகாராயன்குளம் பொலிசாரால் வவுனியா நீதிமன்றில் ஆயர்படுத்தபட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்தவருடம் கனகராயன்குளம் பகுதியில் உணவகம் ஒன்றினை நாடாத்தும் இஸ்லாமிய நபருக்கும், உணவகம் உள்ள காணியை குத்தகைக்கு வழங்கிய உரிமையாளர் என தெரிவிக்கும் முன்னாள் போராளிக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டை அடுத்து கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கபட்டது.
சம்பவ இடத்திற்கு சென்ற கனகராயன்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி குறித்த முன்னாள் போராளி மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கியதாக தெரிவித்து காணி உரிமையாளர் கிளிநொச்சி வைத்தியசாலையிலும், அவரது இரு பிள்ளைகளும் மாங்குளம் வைத்தியசாலையிலும் அனுமதிக்கபட்டு சிகிச்சைபெற்றிருந்தனர்.
குறித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்ததுடன், பொலிஸ் அதிகாரிக்கு எதிராக கனகராயன்குளத்தில் மாபெரும் ஆர்பாட்டம் ஒன்றும் பொதுமக்களால் முன்னெடுக்கபட்டிருந்தது.
குறித்த விடயத்தில் தொடர்புடைய காணியின் உரிமையாளர் என தெரிவிக்கபடும் முன்னாள் போராளியே கெரோயின் வைத்திருந்த குற்றசாட்டில் கைதுசெய்யபட்டு விளக்கமறியலில் வைக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

