புத்தளம் குப்பைக் கிடங்கு வெடித்ததன் பின்னணி இதுதான்!! அதிர்ச்சித் தகவல்கள் இதோ (Photos)
நேற்று புத்தளம் “விஞ்ஞானபூர்வமான திண்மக்கழிவகற்றும்” திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட அருவக்காடு கூழக்கிடங்கு வெடித்துச் சிதறியிருக்கிறது.
பகல் வேளையிருந்து லீச்சர்ட் எனும் திரவம் சேகரிக்கும் சுமார் 30 பர்ச் இடத்தில் கட்டப்பட்ட பாரிய கிடங்கிலிருந்து வாயு வெளியேறிக்கொண்டிருந்ததாகவும் , பின்னர் அந்தக்கிடங்கு பாரிய சத்தத்துடன் வெடித்துச் சிதறியதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
பிரதேச மக்களையோ , ஊடகப்பிரதிநிதிகளையோ உள்ளே அனுமதிக்கவில்லையெனவும் இன்று வேலைக்கு சென்ற தொழிலாளர்களைய்ம் நான்கைந்து நாட்களுக்கு வேலை இல்லை என திருப்பியனுப்பியிருப்பதாகவும் தெரிகிறது.
கடந்த வருடம் அக்டோபரிலு மேல்மாகாண சபை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க , இந்த கட்டுமானப் பொறியியலை 80 வருடங்களுக்கு உத்தரவாதமளித்து வாக்குறுதி வழங்கியிருந்தார்.
80 நாட்களுக்கு கூட தாக்குப்பிடிக்காத சீன தடைசெய்யப்பட்ட நிறுவனத்தின் கட்டுமானப்பணிகளும் திட்டங்களும் பற்றி சூழலியலாளர்கள் , பிரதேசவாசிகள் பல்வேறு முறைப்பாடுகள் , போராட்டங்கள் செய்தும் அடக்குமுறை , அச்சுறுத்தல் மூலம் அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக புத்தளம் மக்களின் எதிர்காலத்தை பணயம் வைத்து எதைச் சாதிக்க நினைக்கிறார் என்பது இப்போது சகலருக்கும் புரிந்திருக்கும்.
எந்த ஏகாதிபத்திய நாட்டின் குப்பையை எமது தலையில் கட்டுவதற்காக , எந்த நாட்டின் கையூட்டிற்காக இவ்வாறான உயிர்கொல்லும் கழிவுகளை இறக்குமதி செய்கிறார்கள் என பிரதேசவாசிகள் கேள்வி எழுப்புகின்றனர்.



