இலங்கை இளைஞன் சிவராம் யோகேஸ்வரனுக்கு லண்டனில் நடந்த கொடுமை!! (Photos)
பிரித்தானியாவில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையை சேர்ந்த 27 வயதான சிவராம் யோகேஸ்வரன் என்ற இளைஞன் இறுதியாக கடந்த மாதம் 5 ஆம் திகதி Kensingtonனின் Brompton வீதியோரத்தில் காணப்பட்டுள்ளார்.
Kensingtonனில் இருந்து காணாமல் போனவர் பெரிய உடல், இருண்ட கண்கள், கறுப்பு கண்ணாடி மற்றும் கறுப்பு நிற முடி கொண்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் ஆட்டிஸம் நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்நிலையில் காணாமல் போன நபரை தீவிரமாக தேடி வரும் பொலிஸார், அவரை கண்டுபிடிக்க பொது மக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
சிவராம் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழே உள்ள இணைப்பை அழுத்துங்கள்….

