புதினங்களின் சங்கமம்

முகமாலையில் ‘வாருங்கள்’ !! அப்படி என்னதான் அங்கு உள்ளது??

இன்றைய தினம் முகமாலையில் வாருங்கோ உணவகத்தில் அருமையான ஓர் மதிய உணவு கிடைத்தது.
வீட்டுச் சாப்பாட்டுப் பக்குவம். மாற்றுத்திறனாளி ஒருவர் தான் உணவகத்தின் உரிமையாளர். உழைத்து வாழும் இப்படியான தொழில் முயற்சியாளர்களுக்கு நாம் நிச்சயமாகக் கைகொடுக்க வேண்டும்.
உணவகத்தின் தொடர்பு இலக்கம் – 0740705066.
நான் பணியாற்றும் நிறுவனத்தின் சார்பான வேலைத் திட்டம் ஒன்றுக்காக 50 பார்சல்கள் மதிய உணவு எடுத்தோம்.
சைவம்,அசைவம் இரண்டு உணவும் கிடைக்கும்.
மச்ச ஒடியல்கூழ் புதன், சனி, ஞாயிறு தினங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
ஒரு கலயக் கூழ் 260 ரூபா.

மரபு ரீதியான உணவுகளும் கிடைக்கும். போதுமான ஓடர்கள் கிடைக்குமாயின் கருப்பணிக் கஞ்சி ஒரு கலயம் 150 ரூபா.

நண்பர்களே
இப் பதிவைப் பகிர்வு செய்து இந்த முயற்சியாளருக்கு ஊக்குவிப்பு வழங்குங்கள்.
ஆதரவும் கொடுங்கள்.

வேதநாயகம் தபேந்திரன்