புதினங்களின் சங்கமம்

யாழில் பதுக்கி வைத்திருந்த பெற்றோல் ஆசிரியையின் உயிரைப் பறித்தது !!

கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் 2012/2013 இல் இந்து சமய பாடத்தில் விசேட பயிற்சி பெற்ற ஆசிரியர் திருமதி பிரபாகரன் பிறேமலதாவின் பிரிவு கவலைக்குரியது.

யாழ் சென் சாள்ஸ் ம.வி. இல் கற்பித்து சுகவீனம் காரணமாக வேலையில் இருந்து நீங்கி இருந்தார்.

அவரது இறுதிக் கிரியைகள் 10.06.2022 அவரது சொந்த இடமான வடமராட்சி கிழக்கு – உடுத்துறையில் இடம்பெறவுள்ளது.

யாழ் நகரில் அவர் தங்கியிருந்த வீட்டில் வைத்திருந்த எரிபொருள் தீப் பிடித்து அவர் உயிர் மாய்த்திருந்தார்.