புதினங்களின் சங்கமம்

மருந்தில்லாது மக்கள் இறந்து கொண்டிருந்த போது ரணில் செய்த கொடூரச் செயல்!!

உலகத்திற்குப் போலியாய் கிளீன் என்று காட்டிக் கொண்டு கோட் சூட்டோடு திரியும் ரணில் ஒரு கிரிமினல் என்று படலந்த வதை முகாமில் இறந்து போன சடலங்களின் உறவுகளைக் கேட்டால் சொல்வார்கள்.
இந்த நாட்டின் கேவலமான அரசியல் சிஸ்டத்தின் கடைசிப் பதர் தான் ரணில். தமிழ் முஸ்லிம் சமூகத்தில் அவருக்கு இருக்கும் கனவான் வேஷம் என்பது அறியாமையால் வந்த ஒன்று. இலங்கையின் முதல் அரச ஆசீர்வாதம் பெற்ற தாதா கோனவல சுனில் எல்லாம் ரணில் ஊட்டி வளர்த்ததுதான்.
பிரேமதாஸவின் பைத்தியகார ஆட்சியை எந்தளவுக்கு நியாயப்படுத்தி இருக்கிறார் என்று பாராளுமன்ற ஹன்சாட் தரவுகளைப் பார்த்தால் புரியும். இவரது அரசியல் வாழ்க்கையின் முதல் பாகம் கிரிமினலிஸம் என்றால் இரண்டாம் பாகம் ஜனநாயகப் பாசிசம்.
ரணிலுக்கு தேர்தலில் வெல்வதற்கு அவரது இளமைக்காலக் கொலைக்களங்கள் தான் கர்ம வினையாக அமைந்திருக்கின்றன.தன்னால் இலங்கை மக்களின் வாக்குகளால் இந்த ஜென்மத்தில் வெல்ல முடியாது என்று அவருக்குத் தெரியும்.
மூன்று ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிட்டுத் தோற்றவர் அவர்.1994 இற்குப் பிறகு அரைகுறையாய் ஆண்ட ஆட்சிகளின் பின்புலங்களைப் பார்த்தால் புரியும்.தந்திரம் என்ற பெயரில் யாரையாவது விலைக்கு வாங்கிக் கொண்டு அல்லது கவிழ்த்துக் கொண்டு அடைந்ததுதான்.
இப்பேர்பட்ட நபர் 2022ம் ஆண்டு நடந்த மக்கள் போராட்டத்தை குறுக்கு வழியில் பயன்படுத்திக் கொண்டு ஜனாதிபதியாகி, நிறைவேற்று அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள சேதாரமடைந்த வீடுகளிற்கு வாரி இறைத்து இருக்கும் நட்ட ஈடுகளைப் பார்க்கும் போது அப்பட்டமான லஞ்சம் என்று புலனாகிறது.
இதெல்லாம் இப்படி இருக்க லண்டனில் வசிக்கும் மகிந்த ரூபசிங்க எழுதி இருக்கும் பேரவலம் ஒன்று இப்போது வைரலாகி இருக்கிறது. அதன் தமிழ் வடிவத்தைச் சுருக்கமாய் தருகிறேன்.
//நான்காயிரம் கோடிகளுக்கு மேற்பட்ட மருத்துவ உபகரணங்களை இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு அனுப்ப கப்பல் கட்டணமாய் பத்துக் கோடி ரூபாய் மட்டுமே செலுத்தும்படி இலங்கை அரசிடம் கோரினோம்.
ஜனாதிபதி ரணில் மற்றும் சுகாதார அமைச்சர் கெஹிலிய ரம்புக்வெல்லவிடம் ஒரு மாதத்திற்குள் தாம் நன்கொடை வழங்கும் உபகரணங்களைப் பெற்றுக் கொள்ளச் சொல்லுமாறு NHS (National health Service) எங்களிடம் கோரியது.
ஆனால் ஜனாதிபதியும் கெஹிலியவும் மெத்தனமாய் இருந்தார்கள். ஹிரு தொலைக்காட்சியின் ‘சலகுன ‘ நிகழ்ச்சிக்கு வந்த கெஹலிய ‘பணமில்லை ‘ என்றார்.
போராட்டத்தின் போது எரிந்து போன அல்லது முற்றாய் நிர்மூலமான சொத்துக்களுக்கு நட்ட ஈடு இக்காலப்பகுதியிலேயே வழங்கப்பட்டு இருக்கலாம்.இந்த நட்ட ஈடு கொடுப்பதில் ஏற்பட்ட அவசரம், முழு நாட்டின் மருத்துவமனைக் கட்டமைப்பை சீரமைப்பதற்குத் தேவையான வளங்களைப் பெற்றுக் கொள்வதற்கு இருக்கவில்லை.
அனுப்பப்படும் 150 முதல் 200 வரையான கண்டெய்னர்களின் கட்டணம் வெறும் பத்து கோடி மட்டுமே.ஆனால் இந்த முன்னாள் சுகாதார அமைச்சரின் வீட்டின் புனரமைப்பிற்கு மட்டும் அரசு கிட்டத்தட்ட பத்துக் கோடி மக்கள் பணத்தை விரயம் செய்து இருக்கிறது.
இப்படி நாட்டைப் பற்றிச் சிந்திக்காது தமது வயிறை மட்டும் வளர்க்கும் பேய்கள் அரசியல் களத்தில் தொடர்ந்தும் இருக்க வேண்டுமா வேண்டாமா என்று மக்கள் தான் சிந்திக்க வேண்டும்.
படம் : லீட்ஸ் ஸ்டோரில் அன்று இலங்கைக்கு அனுப்பிய மிகச் சிறியளவு மருத்துவப் பொருட்கள்//
இப்பேர்பட்ட அயோக்கிய ஆட்சியாளரும் அடிவருடிகளும் இலங்கையைப் பொருளாதாரத்தில் மீட்டெடுத்தார்கள் என்று சொல்வது எவ்வளவு பெரிய அபத்தம்..
May be an image of 28 people and text