யாழில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இருவர் கைது!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் ஒளிபாய்ச்சி சட்டவிரோதமாக மீன்பிடிக்கும் முயற்சிக்காக மிக இரகசியமாக கடற்கரை பகுதிக்கு கொண்டுவரப்பட்ட இரு சட்டவிரோத சுருக்குவலை பறிமுதல் செய்யப்பட்டதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோத மீன்பிடி அதிகரித்துள்ளதால் அதனை ஒடுக்கும் முயற்சியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர் சுற்றிவளைப்பு
இதன் ஒரு பகுதியாக கடலிலும்,நிலத்திலும் தொடர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது கடலில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட ஒரு படகுடன் ஆறு பேர் கடற்படையாலும், நிலத்தில் கடற்படையுடன் இணைந்து பொலிசார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இரு சுருக்குவலைகளுடன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்
கைது செய்யப்பட்டவர்கள் உடமைகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.
சட்டவிரோத செயற்பாடுகளை ஒடுக்கும் முயற்சியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் தொடர் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத மீன்பிடியை உடன் நிறுத்துமாறும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் வெற்றிலைக்கேணி கடற்படை அதிகாரி எச்சரித்துள்ளார்.

