புதினங்களின் சங்கமம்

கொரோனா சந்தேகத்தில் அயல்நாட்டு துணைத் துாதுவரக ஊழியர் யாழ் போதனாவைத்தியசாலையில்!!

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அயல் நாட்டுத் துணைத் தூதரக ஊழியர் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரியவருகிறது.

கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் காணப்படுவதாகத் தெரிவித்து இன்று அவர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சென்றதாகவும் அங்கு அவர் அனுமதிக்கப்பட்டதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

கொரோனா தொற்று தொடர்பிலான பரிசோதனை இன்று மேற்கொள்ளப்படும் என்றும் இன்று மாலை பரிசோதனை முடிவுகள் வெளியாகிய பின்னரே அவருடைய நிலை குறித்து அறிவிக்க முடியும் என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.