புதினங்களின் சங்கமம்

யாழில் ரஜீவன் எம்.பியின் ஆதரவாளர்களால் அப்பாவி இளைஞன் மீது கொடூர தாக்குதல்!! கோப்பாய் பொலிசார் மௌனம்!! வீடியோ

யாழ் உரும்பிராய் கற்பகப் பிள்ளையார் வீதியில் வைத்தியர் ஒருவரின் வீட்டின் முன் இளைஞன் மீது ரஜீவன் எம்.பியின் ஆதரவாளர்கள் என கருதப்படுபவர்களால் கொடூரத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆடு மாடுகளுக்கு கூட இவ்வாறு தாக்குதல் நடாத்தினால் உடனடியாக கைது செய்யப்படும் சட்டம் இரு்ககும் போது நாய்யை விடக் கேவலமாக குறித்த இளைஞனை நிலத்தில் போட்டு காவாலிகள் கொடூரத் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்கள். இச் சம்பவம் தொடர்பாக இளைஞனின் உறவுகள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் பொலிசார் இதுவரை எடுக்கவில்லை என உறவினர்கள் தரப்பால் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது பற்கள் உடைந்து உடலில் கடும் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த இளைஞன் தொடர்பாக பொலிசார் அக்கறையின்றியுள்ளதுடன் இளைஞனைத் தாக்கியவர்கள் தேர்தல் காலத்தில் NPP யில் போட்டியிட்ட ரஜீவனுக்கு சார்பாக செயற்பட்டவர்கள் எனவும் அதனாலேயே பொலிசாரின் செல்வாக்குடன் கடும் அட்டகாசம் செய்து வருகின்றார்கள் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளார்கள் . குறித்த காவாலிகள் போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனை செய்பவர்கள் எனவும் தெரியவருகின்றது.

கோப்பாய் பிரதேச அபிவிருத்திக்குப் பொறுப்பாக NPP அரசால் நியமிக்கப்பட்டுள்ள ரஜீவன் எம்.பி இவ்வாறான போதைப் பொருள் காவாலிகளுடன் கூட்டுச் சேர்ந்து செயற்படுகின்றாரா? என அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x