புதினங்களின் சங்கமம்

டிக்டொக் ஊடாக போக்குவரத்து பொலிசாரை நக்கல் அடித்தார்களாம்! இரு தமிழ் காவாலிகள் கைது!

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கையின் போது, டிக்டொக் செயலி ஊடாக கடமையில் இருந்த போக்குவரத்துப் பொலிஸாரை கேலி செய்து காணொளி பதிவிட்ட இரு சாகச மோட்டார் சைக்கிள் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூன் 5ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை சம்மாந்துறை புறநகர் பகுதிகளில் திடீர் போக்குவரத்து விசேட பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது தலைக்கவசம் அணியாமல் வாகனம் செலுத்துதல், சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்துதல், கவனக்குறைவாக வாகனம் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவற்றின் சாரதிகளுக்கும் எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

அத்துடன், டிக்டொக் செயலி ஊடாக கடமையில் இருந்த போக்குவரத்துப் பொலிஸாரை கேலி செய்து காணொளிகளை வெளியிட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இருவரை பொலிஸார் கைது செய்தனர்.

மேலும் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது சாரதி அனுமதிப்பத்திரம், வருமான வரிச் சான்றிதழ், காப்புறுதிச் சான்றிதழ் இன்றி வாகனம் இயக்குதல், தலைக்கவசம் அணியாமை மற்றும் கவனக்குறைவான வாகன ஓட்டம் போன்ற குற்றச்சாட்டுகளுக்காகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவருக்கு நீதிமன்றத்தினால் 38,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஏனையோருக்கு எதிராகவும் எதிர்வரும் நாட்களில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x