யாழில் 18 வயதான் ஜெசிக்கா கிணற்றில் விழுந்து மரணமானது தற்கொலையா?
யாழ்ப்பாணம் – கைதடியில் கிணற்றில் தவறி விழுந்த இளம் பெண் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) கைதடி மத்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கைதடி குமரநகரைச் சேர்ந்த கணேசன் ஜெசிக்கா (வயது 18) எனும் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த யுவதி நேற்று கிணற்றடிக்கு முகம் கழுவுவதற்காகச் சென்றபோதே கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். இதனையடுத்து யுவதியை மீட்ட உறவினர்கள், அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.