மனநலன் குன்றிய பிச்சைக்காரனை கேலி செய்த சிங்கள மாணவிக்கு நடந்த கொடுமை!!
அட்டன் நகரில் அமைதியற்ற முறையில் செயற்பட்ட யாசகர் ஒருவர் அங்கு , நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தியதோடு , மேலும் இருவரைக் காயப்படுத்தியுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்ற நிலையில் யாசகர் அட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் யாசகரின் தாக்குதலில் பாடசாலை மாணவியொருவரும் காயமடைந்துள்ளார்.
குறித்த யாசகர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், அவரை பிடிப்பதற்கு பிரதேசவாசிகள் முயன்ற போது, அவர் பள்ளிவாசலுக்குள் சென்று மறைந்துக்கொண்டுள்ளார்.
இதனையடுத்து அட்டன் பொலிஸார் யாசகரை மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.
இதேவேளை, அங்குள்ள சில இளைஞர்கள் குறித்த யாசகரை கேலிக்குட்படுத்துவதாகவும் , இதன் காரணமாக குறித்த யாசகர் கற்களால் தாக்குவாரெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் கைதுசெய்யப்பட்ட யாசகரை அட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி, நீதிமன்றத்தின் அனுமதியுடன் அவரை அங்கொடை மனநல வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க உள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

