புதினங்களின் சங்கமம்

சியோன் தேவாலய தற்கொலைத்தாரியின் உடற்பாகங்கள் புதைக்கப்பட்டன

மட்டக்களப்பு – சியோன் தேவாலயத்தின் மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய தற்கொலைதாரியின் உடற்பாகங்கள் இன்று புதைக்கப்பட்டுள்ளன.

காத்தான்குடி பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் இந்த உடற்பாகங்கள் இன்று புதைக்கப்பட்டுள்ளன.

கடும் பாதுகாப்புக்கு மத்தியில் இந்த உடற்பாகங்கள் புதைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு – கல்வியங்காடு இந்து மயானத்தில் இந்த உடற்பாகங்கள் ஏற்கனவே புதைக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிராக மக்கள் பாரிய போராட்டங்களை நடத்தியிருந்தனர்.

இந்தநிலையில், நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய, குறித்த உடற்பாகங்கள் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு, இன்றைய தினம் காத்தான்குடியில் புதைக்கப்பட்டுள்ளன

Image may contain: tree, sky, outdoor and nature