புதினங்களின் சங்கமம்

நீதிமன்ற உத்தரவை மீறி பொலிஸ் பாதுகாப்புடன் ஆலயத்திற்கு அருகில் பிக்குவின் உடல் எரிக்கப்பட்டது!

நீதிமன்ற உத்தரவையும் மீறி நீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் பௌத்த பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.

பொலிசாரின் பாதுகாப்புடன் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.

 

நீதிமன்ற தடை உத்தரவை மீறி ஞானசாரதேரர் தலைமையில் நீராவியடி தீர்தகுளக்கரையில் பிக்குவின் உடல் எரியூட்டபட்டுள்ளது.

ஆனால்

பெளத்த பிக்குவின் உடலை இராணுவ முகாமுக்கு அண்மித்தாக தகனம் செய்ய நீதிமன்று தீர்ப்பு

முல்லைத்தீவு நாயாறு குருகந்த புராண ரஜமகா விஹாரையின் விஹாராதிபதியின் உடலை முல்லைத்தீவு பழைய செம்மலைக்கு அண்மையில் உள்ள இராணுவ முகாமுக்கு அருகே உள்ள கடற்கரையில் தகனம் செய்ய அறிவுறுத்திய நீதிமன்றம் பிக்குவின் சமாதி அமைப்பதற்கு தடை விதித்து கட்டளையிட்டது.

நிரந்த நீதிவான் விடுப்பில் இருந்தமையால் பதில் நீதிவான், இன்று திங்கட்கிழமை வரை பௌத்த பிக்குவின் உடலை முல்லைத்தீவில் புதைக்கவோ, தகனம் செய்யவோ முடியாது என இடைக்காலக் நேற்றுக் கட்டளை வழங்கியிருந்தார்.

இந்த நிலையில் வழக்கு நிரந்தர நீதிவான் லெனின்குமார் முன்னிலையில் இன்று (23) விசாரணைக்கு வந்தது.

இரு தரப்பிலும் சட்டத்தரணிகள் முன்னிலையாகி வாதப் பிரதிவாதங்களை முன்வைத்தனர்.

இதன் பிரகாரம் வழக்கை விசாரித்த நீதிமன்று மேற்கண்டவாறு தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கவேமாட்டார்களா..?

நீதிமன்றம் கடற்கரையாக உள்ள இடத்தில் இறுதிக்கிரியைகள் செய்யுமாறு தீர்ப்பு வழங்கியுள்ளபோதிலும், நீராவிடியடி பிள்ளையார் ஆலயத்திற்குப் பின்புறமாகவுள்ள குளக்கரையில் புற்றுநோயால் இறந்த பிக்குவுக்கான இறுதிக்கிரியைகள் இடம்பெற்று முடிந்துள்ளன. எனவே நீதிமன்றத் தீர்ப்பெல்லாம் ஒரு பொருட்டே அல்ல அவர்களுக்கு…! பொலிஸார் அதைக் கையில் பிடித்தபடி வேடிக்கை பார்க்கமட்டுமே முடிந்தது.

நேற்றைய தினம் இப்போது கிடங்கு வெட்டிக்கொண்டிருக்கும் இதே குளக்கரை பகுதியில் பிக்குவுக்கான இறுதிக் கிரியைகளை செய்ய ஆலயத்தினருடன் பிக்குமார் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தனர். அதன்போது, ஆலயத்தினர், இங்கு செய்யமுடியாது. நீதிமன்ற தீர்ப்பின்படி செய்துகொள்வோம் என உறுதியாகக் கூறிவிட்டனர். அதன்படி நீதிமன்ற தீர்ப்பு கடற்கரையாக இறுதிக்கிரியைகளை செய்யும்படி பணித்தும், அதைக் கிஞ்சித்தும் மதிக்காமல், ஆலயத்தை அண்டிய குளக்கரை பகுதியிலேயே இறுதிக்கிரியைகள் நடந்திருக்கின்றன. நீதிமன்றம் சொன்னால் என்ன அமைச்சர் சொன்னால் என்ன எதையும் கவனத்தில் எடுக்கவில்லை.

இந்த மனநிலையை என்னவென்று சொல்வது?

இதுவொரு உதாரணம்தான், வடக்கு கிழக்கில் முளைத்திருக்கின்ற அனைத்து பௌத்த விகாரைகளுக்கும் பின்னால் வரப்போகிற பிரச்சினை இதுதான். ஏற்கனவே கடந்தவருடம் யாழ்ப்பாணத்தில் இப்படியொரு பிரச்சினை வரும்போது குறைந்தது ஒரு லட்சம் மக்களாவது திரண்டு முற்றவெளியில் எதிர்ப்பைக் காட்டியிருந்தால் இது நடந்திருக்குமா? நாளைக்கு எலும்பு, தாடை, பல் என பிக்குமாரின் உடலெச்சங்களைக் கொண்டு எழுப்பப்படப்போகும் தூபிகளுக்குரிய காணிகளை வழங்கவும் தமிழர்கள் இப்போதே தயாராக வேண்டும்.

Image may contain: one or more people, sky, grass, mountain, cloud, outdoor and natureImage may contain: one or more people, people standing, sky, outdoor and natureImage may contain: 1 person, outdoor, nature and waterImage may contain: one or more people, grass and outdoor